ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை – நாட்டின் துரிதவளர்ச்சிக்கு பங்களிக்கும் – பிரதமர்

245 0

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீள கிடைக்கப்பெற்றமையானது, நாட்டின் அபிவிருத்தியை துரிதமாக முன்னெடுக்க உதவும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக 500 மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பிய சந்தைக்குள் இலங்கையால் பிரவேசிக்க முடியும்.

இது அதிகப்படியான அந்நிய செலாவணியை நாட்டுக்கு ஈட்டிக் கொடுக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதேநேரம் உலகில் அதிக சனத்தொகையைக் கொண்ட நாடுகளான சீனா மற்றும் இந்தியாவின் சந்தை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வதன் ஊடாகவும் இலங்கைக்கு பாரிய நன்மைகள் கிடைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.