கிழக்கு மாகாண கல்வி முன்னேற்றத்தை மத்திய கல்வி அமைச்சு பாழ்படுத்துகிறதா? – கிழக்கின் முன்னாள் முதல்வர் கேள்வி
கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறை முன்னேற்றத்தை பாழ்படுத்துவதற்கு மத்திய கல்வியமைச்சு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் கேள்வி எழுப்பியுள்ளார். வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகளின் பெற்றோருடனான சந்திப்பு ஏறாவூரில் உள்ள முன்னாள் முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றபோது இந்த விடயத்தை அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வித்துறை வீழ்ச்சிக்கு ஆசிரியர் பற்றாக்குறை பிரதான பிரச்சினையாக உள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பயிற்றப்பட்ட ஆசிரியர்களை

