பெட்ரோல் தட்டுப்பாட்டினால் தொடருந்து தொழிற்சங்கத்தின் போராட்டம்

5950 45

பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து தொழிற்சங்க சம்மேளனங்கள் பல ஒன்றிணைந்து நாளை நள்ளிரவு தொடக்கம் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ள தயாராகின்றனர்.

இலங்கை தொடரூந்து கட்டுப்பாட்டு சங்கத்தின் பிரதான செயலாளர் பி.எம்.பி பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், பிரதியமைச்சர் வழங்கிய உறுதிமொழியினை அடுத்து போராட்டத்தை கைவிட்டோம்.

அவர் இரண்டு வாரங்களுக்குள் தீர்வு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

எனினும் இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் அவர் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமை காரணமாகவே, எதிர்வரும் 8ஆம் திகதி நள்ளிரவு முதல் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட மத்திய செயற்குழு தீர்மானித்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த தினம் இந்த சங்கம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தயாரான நிலையில், பிரதியமைச்சர் சோக அபேசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தையினை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போது பெற்றோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் தொடருந்து தொழிற்சங்கமும் போராட்டம் குறித்து அறிவித்துள்ளது.

இதனால் பொதுமக்களுக்கும் பயணிகளும் கடும் நெருக்கடி நிலைக்கு உள்ளாவார்கள் என சுட்டிக்காட்டப்படுகிறது.

Leave a comment