இடைக்கால அறிக்கையில் சமஷ்டியின் பணிகள்

4938 17

அரசியல் யாப்பு வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கையில் சமஷ்டியின் பணிகள் இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் புதுக்குடியிருப்பு நிர்வாகிகளை தெரிவு செய்யும் கூட்டம் நேற்று நடைபெற்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியானது ஒற்றையாட்சியை நீக்கி, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற ஆழமான கொள்கையின் ஊடாகவே பயணிக்கிறது என்றும், அந்த இலக்கு இடைக்கால அறிக்கையிலும் இருக்கிறது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன்

Leave a comment