நாடு முழுவதும் பெற்றோல் விநியோகம்

622 4

2400 மெட்ரிக் டன் பெற்றோல் நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளது.

இன்றையதினம் நாடு முழுவதும் 2400 மெட்ரிக் டன் பெற்றோல் நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளது.

கனிய எண்ணைக் வள அமைச்சின் செயலாளர் உபாலி மாரசஙி;க இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினமும் இதே அளவான பெற்றல் விநியோகம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாளையதினம் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை அடையும் என்றும், 9ம் திகதி காலை முதல் பெற்றோல் விநியோகம் சீரடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் எந்த ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் மூடி வைப்பதானது சட்டவிரோதமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்றாலும், டீசல் விநியோகம் சீராக இடம்பெறுகிறது.

எனவே டீசல் வழங்குவதற்காகவேனும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக பெற்றோலை கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் நேற்றையதினமும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெற்றோலுக்கான தட்டுப்பாடு நிலவியது.

இதனால் பெற்றோலைப் பெற்றுக் கொள்ள மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்க நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment