அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
நீண்ட ஆசிய விஜயத்தின் முதற்கட்டமாக ஜப்பான் சென்ற அவர், இன்று தென்கொரியா சென்றுள்ளார்.
அமெரிக்க- தென்கொரிய கூட்டு இராணுவ செயற்பாடுகள் மற்றும் வடகொரியாவின் அணுவாயுத சோதனைகள் என்பவற்றை மையப்படுத்தி, பிராந்தியத்தில் பதற்ற நிலை நிலவுகிறது.
தென்கொரியாவுடனான அமெரிக்காவின் இராணுவ தொடர்புகளுக்கு வடகொரியா எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே டொனால்ட் ட்ரம்ப் தமது விஜயத்தை மேற்கொள்கிறார்.
வடகொரியாவினால் ஏற்படும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, டொனால்ட் ட்ரம்பின் இந்த விஜயத்தினது முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.
எனவே தென்கொரியாவின் தலைமையுடன் இந்த விடயம் குறித்த விரிவான பேச்சுவார்த்தைகளை ட்ரம்ப் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

