மோசடி குறித்து ஆராய விசேட மேல்நீதிமன்றம்

Posted by - November 8, 2017

நிதிமோசடி, ஊழல், அரசாங்க சொத்துக்கள் மற்றும் வருமானம் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவு படுத்துவதன் பொருட்டு மூன்று பேர் கொண்ட நீதியரசர்களை உள்ளடக்கிய விசேட மேல்நீதிமன்றம்  ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை  அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோசடியினால் அரசாங்கத்திற்கு 50 கோடி ரூபா வரையில் நட்டம்!

Posted by - November 8, 2017

ஜே.வி.பி இன்று லஞ்ச ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளது. சிவில் பாதுகாப்பு படையணியின் பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட  திட்டங்களின் மூலம் பெறப்பட்ட இலாபம், திறைச்சேரிக்கு கையளிக்கப்படாமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டை கையளித்தன் பின்னர் கருத்து  தெரிவித்த, திகாமடுல்ல மக்கள் உரிமை பாதுகாப்பு  அமைப்பின் இணைப்பாள வசந்த பியதிஸ்ச, 2009ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் இந்த மோசடியினால் அரசாங்கத்திற்கு 50 கோடி ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதனை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு

விகாரையில் தங்க வேலி திருட்டு 

Posted by - November 8, 2017

பிபிலை – மெதகம – 15ஆம் கட்டை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த தங்க வேலி அடையாளம் தெரியாத சிலரால் அபகரிக்கப்பட்டுள்ளது. 142  தங்க தூண்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி  5  லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மெதகம காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தேங்காயின் விலையை பேண அறிவுறுத்தல் 

Posted by - November 8, 2017

சதொச  ஊடாக விநியோகிக்கப்படுகின்ற தேங்காயின் விலையை 65 ரூபாவாக பேணுவதற்கு, வாழ்க்கைச் செலவு குழு அறிவுறுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவுக் குழுவின் நேற்றைய கூட்டத்தில் வைத்து இந்த  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தையில்  தற்போது தேங்காயின் விலை அதிகரித்துச் செல்கின்ற நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சதொச  ஊடாக விநியோகிக்கப்படுகின்ற அரிசி வகைகளுக்கு  2  ரூபாய் மாத்திரமே இலாபமாக வைத்து விற்பனை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மழை காரணமாக 3 பேர் பாதிப்பு 

Posted by - November 8, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக  பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆயிரத்து 98 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர் முகாமைத்துவ அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக உடுவில், சண்டிலிப்பாய், நல்லூர், சாவகச்சேரி, தெல்லிப்பழை, பருத்தித்துறை, வேலணை, கோப்பாய், சங்கானை ஆகிய  பகுதிகளில் மழை அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் இரு வீடுகளும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு வீடும்

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளராக வைத்தியக் கலாநிதி குமரவேல் நியமனம்

Posted by - November 8, 2017

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளராக வைத்தியக் கலாநிதி குமரவேல் நியமிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்தார்.கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளராக வைத்தியக் கலாநிதி குமரவேல் நியமிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வு நேற்று வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்டத்திக்கு ஓர் நிரந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை

தங்கம் கடத்திய இலங்கையர் இந்தியாவில் கைது

Posted by - November 8, 2017

கொழும்பில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தியதாக தெரிவித்து, இலங்கையர் ஒருவர் கைதாகியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து 118 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

200 ஏக்கர் நில மோசடி

Posted by - November 8, 2017

அக்கராயன் கரும்புத் தோட்ட காணி முன்னர் குத்தகைக்குப் பெற்ற நிறுவனத்தின் முகாமையாளரான கோபாலபிள்ளை லண்டனில் உள்ள ஒருவருக்கு குறித்த 200 ஏக்கர் நிலத்தை முன்பே ஒரு கோடியே 50 லட்சம் ரூபாவிற்கு விற்றவர்களே தற்போது உரிமை கொண்டாடுகின்றனர் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். அக்கராயன் பிரதேசத்தில் உள்ள கரும்புத் தோட்ட 200 ஏக்கர் காணி தொடர்பில் சபையில் பிரசன்னம் அற்ற நிலையில் விவாதிக்கப்பட்டமையானால் அதன் விளக்கமாக  முதலமைச்சரால் அனுப்பப்பட்ட கடிதம் சபையில்  வாசிக்கப்பட்டதனையடுத்தே

யாழில் ஆயிரத்து 98 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - November 8, 2017

யாழ் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆயிரத்து 98 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் புள்ளிவிபரத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பித்த மழை தொடர்சியாக பெய்து வருகின்ற நிலையில் வடக்கில் யாழ் மாவட்டத்திலும் தொடர்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் சில சில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் உடுவில் பிரதேச செயலர்

பல மாகாணங்களில் இன்று பலத்த மழை

Posted by - November 8, 2017

பல மாகாணங்களில் இன்றைய தினமும் (8) 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதனுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னலினால் ஏற்படும் பாதிப்புக்களை