யாழ் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆயிரத்து 98 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பித்த மழை தொடர்சியாக பெய்து வருகின்ற நிலையில் வடக்கில் யாழ் மாவட்டத்திலும் தொடர்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் சில சில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 94 குடும்பங்களை சேர்ந்த 342 பேரும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 110 குடும்பங்களை சேர்ந்த 381 பேரும்நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 17 குடும்பங்களை சேர்ந்த 60 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 45 குடும்பங்களை சேர்ந்த 175 பேரும்தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 380 குடும்பங்களை சேர்ந்த 1207 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 162 குடும்பங்களை சேர்ந்த 599 பேரும்வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 40 குடும்பங்களை சேர்ந்த 137 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 213 குடும்பங்களை சேர்ந்த 769 பேரும், சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 34 குடும்பங்களை சேர்ந்த 185 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின்னல் காரணமாக உடுவில் பிரதேச செயலர்பிரிவுக்குட்பட்ட 2 குடும்பங்களில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் இரு வீடுகளும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு வீடும் முழுமையாக பதிக்கப்பட்டுள்ளதுடன்
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 8 வீடுகளும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 13 வீடுகளும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 2 வீடுகளும்சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 15 வீடுகளும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 22 வீடுகளும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 3 வீடுகளும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 4 வீடுகளும்சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் ஒரு வீடும் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என மேற்குறித்த புள்ளி விபரத்தில் நேற்று பதிவிடப்பட்டுள்ளது.

