ஜே.வி.பி இன்று லஞ்ச ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளது.
சிவில் பாதுகாப்பு படையணியின் பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் மூலம் பெறப்பட்ட இலாபம், திறைச்சேரிக்கு கையளிக்கப்படாமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டை கையளித்தன் பின்னர் கருத்து தெரிவித்த, திகாமடுல்ல மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பின் இணைப்பாள வசந்த பியதிஸ்ச, 2009ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் இந்த மோசடியினால் அரசாங்கத்திற்கு 50 கோடி ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அதனை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரியே, முறைப்பாடு முன்வைக்கப்பட்டதாகவும் வசந்த பியதிஸ்ச தெரிவித்தார்.

