பல மாகாணங்களில் இன்று பலத்த மழை

389 0

பல மாகாணங்களில் இன்றைய தினமும் (8) 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னலினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரியுள்ளது.

Leave a comment