50 மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைக்கப்படவுள்ளன.

Posted by - January 2, 2017

50 மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மருந்துப் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர் பாலித்த அபேகோன் இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில், மருந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களுக்கும் அரச மருத்துவ தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 48 அத்தியவசிய மருந்துப் பொருட்;களின் விலைகள் கடந்த ஒக்டோபர் மாதம் அரசாங்கத்தால் குறைக்கப்பட்டன. இந்த நிலையிலேயே மேலும் சில மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஏற்கனவே விலைகள் குறைக்கப்பட்டுள்ள மருந்து பொருட்கள்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 159 பேர் கைது

Posted by - January 2, 2017

நீதிமன்றத்தைப் புறக்கணித்த நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 159 பேர் கடந்த சில தினங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை காவல்துறை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாரிய குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 54 பேர் இதில் உள்ளடங்குகின்றனர். கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எல்லை வேலியை குடியேறிகள் தகர்க்க முயற்சி

Posted by - January 2, 2017

மொராக்கோ மற்றும் ஸ்பெயினில் உள்ள ஷியோட்டா பகுதிக்கு இடையில் உள்ள எல்லை வேலியை ஆயிரத்திற்கும் அதிகமான ஆப்பிரிக்க குடியேறிகள் தகர்த்துக் கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர். இதன்போது இடம்பெற்ற மோதல் நிலைமையால் ஸ்பெயினைச் சேர்ந்த ஐந்து காவல்துறை அதிகாரிகளும் மொராக்கோவைச் சேர்ந்த ஐம்பது பாதுகாப்புப் படையினரும் காயமடைந்துள்ளதாக சர்வதேசச் செய்திகள் தெரிவித்துள்ளன. இரண்டு பேர் சிகிச்சைக்காக ஷியோட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும், மற்றவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் மாட்ரிட் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் ஒரு பகுதியாக

பாவனைக்கு உதவாத அரிசி விற்பனையில்

Posted by - January 2, 2017

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விலங்கு உணவுக்காக ஒதுக்கப்பட்ட பாவனைக்கு உதவாத ஒரு தொகை அரிசி கொழும்பு புறக்கோட்டையில் விற்பனைசெய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் பாரிய அளவிலான அரிசி வியாபாரத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்னவினால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை அரிசி பாவனைக்கு உதவாத நிலையில் அவை விலங்குணவுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

சுவிசில் தாயக உறவுகளுடன் உணர்வோடு சங்கமித்த மாபெரும் புத்தாண்டும் புதுநிமிர்வும் 2017!

Posted by - January 2, 2017

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் சுவிஸ் தமிழீழ உறவுகளுடன் இன உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் நடாத்தப்பட்டு வருகின்ற புத்தாண்டும் புதுநிமிர்வும் மாபெரும் நிகழ்வானது 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச் மாநிலத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடனும், சுவிஸ் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பேராதரவில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் 18வது தடவையாக சுவிஸ் தமிழர் நடாத்திய இம் மாபெரும் புத்தாண்டு நிகழ்வானது நிகழ்வுச்சுடர், பொதுச்சுடர், ஈகைச்சுடரேற்றலுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள்

நீதியின்றி இழுபடும் திருகோணமலை மாணவர்கள் படுகொலை!

Posted by - January 2, 2017

க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில் மிலேச்சத்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் நல்லாட்சி அரசாங்கத்தின்

நாட்டின் வறுமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரச ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும்- இரா.சம்பந்தன்

Posted by - January 2, 2017

ஒற்றுமையை பலப்படுத்தி, நாட்டின் வறுமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரச ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புதுவருட நிகழ்வை முன்னிட்டு, இன்று காலை இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. தமது கடமைகளை உரிய முறையில் செய்ய வேண்டும் எனவும், இந்த

23 மாதங்களில் நல்லிணக்கம் எங்கே? – அசாத் சாலி

Posted by - January 2, 2017

நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக ஒத்துழைப்பு வழங்கியமையை இட்டு தான் வெட்கப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஜெனீவாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அசாத் சாலி, லண்டன் நகரிலுள்ள பீ.பீ.சி தலைமை அலுவலகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஆட்சியிலுள்ள தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்திய போதிலும், தமக்கு நியாயம் நிலைநாட்டப்படவில்லை என்பதனால், ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 23 மாதங்களில்

வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைக்குள் எந்தவொரு சுற்றாடல் அழிவும் இடம்பெறவில்லை- மைத்திரிபால சிறிசேன

Posted by - January 2, 2017

  வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைக்குள் எந்தவொரு சுற்றாடல் அழிவும் இடம்பெறவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும், வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்துள்ள வனப் பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களிடம் ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். வனஜீவராசிகள், சுற்றாடல், வன பாதுகாப்பு மற்றும் வனவள அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களை

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சரத் குமார குணரத்னவுக்கு விளக்கமறியல்

Posted by - January 2, 2017

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் சரத் குமார குணரத்ன எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மோசடி சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி, குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னாள் அமைச்சர் சரத் குமார குணரத்ன இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.