பாவனைக்கு உதவாத அரிசி விற்பனையில்

265 0

rice-aathavanகடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விலங்கு உணவுக்காக ஒதுக்கப்பட்ட பாவனைக்கு உதவாத ஒரு தொகை அரிசி கொழும்பு புறக்கோட்டையில் விற்பனைசெய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நடுத்தர மற்றும் பாரிய அளவிலான அரிசி வியாபாரத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்னவினால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை அரிசி பாவனைக்கு உதவாத நிலையில் அவை விலங்குணவுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

குறித்த அரிசி 38 ரூபாய் வீதம் அரசாங்கத்தினால் விற்பனை செய்யப்பட்டது.

இந்த அரிசி மீள் புதுப்பிக்கப்பட்டு வெளிநாட்டு அரிசி எனக்கூறி 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக நாமல் கருணாரத்ண குறிப்பிட்டுள்ளார்.