குச்சவௌியில் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன
குச்சவௌி, நீலபனிக்கன்ராய் வாவி பிரதேசத்தில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
குச்சவௌி, நீலபனிக்கன்ராய் வாவி பிரதேசத்தில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வரும் ஒருவர் கிரான்ட்பாஸ் மாடிக்கட்டிட வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம், இனப்பிரச்சினைக்கு ஒர் அரசியல் தீர்வைக் காண முடியுமா, எந்த வகையில் அது சாத்தியம் என்பதை பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை உருவாகியிருக்கின்றது.
வட கிழக்கு பிரேசில் நகரான நாட்டல் நகரத்தில் உள்ள மிகப்பெரிய சிறைக்கூடமான அல்காகூஸ் கைதிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். சிறையடைக்கப்பட்டிருந்த இரு குழுக்களுக்கு இடையே ஆரம்பமான மோதல் காரணமாக குறைந்தது 10 கைதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சிறைக்கூடத்தின் உள் மேலும் கைதிகள் பலியாகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் இந்த சிறைச்சாலையில் இடம்பெற்ற மூன்றாவது பாரிய மோதல் சம்பவம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியான மோதல் ஒன்றில் சுமார் நூறு கைதிகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸ்ட்சர்லாந்தின் டவேஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார். பிரதமர் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் பிரதமர் அங்கு தங்கியிருப்பார் என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலக பொருளாதார மாநாட்டில் 40யிற்கும் அதிக நாடுகளின் அரச தலைவர்கள் பங்குகொள்ள உள்ளனர். இதன்போது பிரதமர் முன்னணி அரச தலைவர்கள் மற்றும் முன்னணி சர்வதேச வர்த்தகர்களுடன் கலந்துரையாடவுள்ளார் என பிரதமர் அலுவலகம்
கடந்த 2016ஆம் ஆண்டு காலப்பகுதியினில் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மூலம் 350 கோடி அமெரிக்க டொலர் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 7 வருடங்களுக்குப் பின்னர் கிடைத்த அதிக வருவாய் இதுவென சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரத்துங்க தெரிவித்துள்ளார். எப்படியிருந்த போதிலும், கட்டுநாயக்க சர்வதேச வாநூர்தி நிலையம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் செயல்படுவதன் காரணமாக பல வாநூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஓடுபாதையின் தரத்தை உயர்த்தும் பணிகளுக்காக 3 மாதங்களுக்கு பகல் நேரத்தில் வாநூர்தி
குடியேறிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று மத்தியதரை கடல் பிராந்தியத்தில் லிபியாவிற்கும் இத்தாலிக்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் நூறு பயணிகள் இந்த அனர்த்தத்தில் மரணித்திருக்கலாம் என கவலை வெளியிடப்பட்டள்ளது. இத்தாலிய கரையோர காவல் படையினர் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை எட்டு உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நான்கு பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த இத்தாலிய அதிகாரிகள் தொடர்ந்தும் தேடும் பணிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர பிரான்ஸ் கடற்படையின் கப்பல் ஒன்று மற்றும்
முறிவடைந்துள்ள இஸ்ரேல் – பலஸ்தீன சமாதான பேச்சு வார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்தினால் பிரான்ஸ் தலைநகர் பெரிசில் இதற்கான பேச்சு வார்த்தை இடம்பெறுகின்றன. இந்த கலந்துரையாடலில் 70 உலக நாடுகளின் பிரநிதிகள் பங்குகொள்கின்றனர். இவர்கள் பலஸ்தீன பிரச்சினைகளுக்கு இரண்டு நாடுகளின் தீர்வுகளை ஏற்றுள்ளனர். இந்த சமாதான பேச்சுவார்த்தையை பலஸ்தீனத்தின் வரவேற்றுள்ள அதேவேளை, இது தமக்கு எதிராக சர்வதேச சக்திகள் ஒன்றிணைவு என இஸ்ரேஸ் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த பேச்சு வார்த்தையில் பலஸ்தீனத்தினதோ அல்லது இஸ்ரேலினதோ பிரநிதிகள்
வெதுப்பக உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் உப பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளதன் காரணமாக வெதுப்பக உற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என வெதுப்பக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் தமது உற்பத்திகளுக்கான விலை அதிகரிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
விசேட தேவையுடைய இராணுவத்தினரின் ஓய்வூதிய கொடுப்பனவை எதிர்வரும் பெப்பிரவரி மாதம் முதல் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார். இதற்கு அமைய 10 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்யாத அதிகாரிகளுக்கும், 12 வருடம் சேவையாற்றாத ஏனைய தர நிலையில் உள்ளவர்களுக்கும் இந்த ஓய்வூதிய கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார். ஓய்வூதிய கொடுப்பனவை வழங்க கோரி