சுற்றுலா பயணிகள் மூலம் இலங்கைக்கு 350 கோடி அமெரிக்க டொலர் வருமானம்

237 0

625.500.560.350.160.300.053.800.900.160.90கடந்த 2016ஆம் ஆண்டு காலப்பகுதியினில் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மூலம் 350 கோடி அமெரிக்க டொலர் வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த 7 வருடங்களுக்குப் பின்னர் கிடைத்த அதிக வருவாய் இதுவென சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரத்துங்க தெரிவித்துள்ளார்.

எப்படியிருந்த போதிலும், கட்டுநாயக்க சர்வதேச வாநூர்தி நிலையம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் செயல்படுவதன் காரணமாக பல வாநூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஓடுபாதையின் தரத்தை உயர்த்தும் பணிகளுக்காக 3 மாதங்களுக்கு பகல் நேரத்தில் வாநூர்தி நிலையம் மூடப்படுவதனால் சுற்றுலா பயணிகளின் வருகை 30 சத வீதத்தால் வீழ்ச்சியடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஓடுபாதை மேம்பாட்டு பணிகள் முற்றாக நிறைவடைந்ததன் பின்னர், நிலமை வழமைக்கு திரும்பும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, 2016ஆம் ஆண்டில் இலங்கை வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 25 லட்சம் என தெரிவித்துள்ள அமைச்சர் ஜோன் அமரதுங்க, எதிர்வரும் காலங்களில் இந்த நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டு அதிக எண்ணிக்கையினர் வருவர் என குறிப்பிட்டார்.