ஹெரொயின் விற்பனை செய்த ஒருவர் கைது

294 0

525212571Arrestஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வரும் ஒருவர் கிரான்ட்பாஸ் மாடிக்கட்டிட வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவிசாரணை பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புகளின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்த 106 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 41080 ரூபா ரொக்க பணமம் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொட்டிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.