விசேட தேவையுடையவர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஓய்வூதிய கொடுப்பனவு

200 0

Karunasena-Hettiarachchi-400-seithyவிசேட தேவையுடைய இராணுவத்தினரின் ஓய்வூதிய கொடுப்பனவை எதிர்வரும் பெப்பிரவரி மாதம் முதல் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய 10 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்யாத அதிகாரிகளுக்கும், 12 வருடம் சேவையாற்றாத ஏனைய தர நிலையில் உள்ளவர்களுக்கும் இந்த ஓய்வூதிய கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.

ஓய்வூதிய கொடுப்பனவை வழங்க கோரி விசேட தேவையுள்ள இராணுவத்தினர் எதிர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கடந்த வருடம் நொவம்பர் மாதம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஏற்பட்ட இயல்பற்ற நிலையை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீச்சியடித்தமை குறிப்பிடத்தக்கது.