வெதுப்பக உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் உப பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளதன் காரணமாக வெதுப்பக உற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என வெதுப்பக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் தமது உற்பத்திகளுக்கான விலை அதிகரிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

