நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை

Posted by - January 17, 2017

நாட்டில் பயன்பாட்டிலுள்ள நாணயத்தாள்களை சேதப்படுத்தி மாற்றங்களை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது புழக்கத்திலுள்ள நாணயத்தாள்களை சிறந்த முறையில் பேணுவதே இதன் நோக்கமாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கென இந்த ஆண்டு பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நாணய குற்றிகளை வெளியிடுதல் தொடர்பில் முறையான நடைமுறைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 2017ஆம் ஆண்டில் புதிய நாணய குற்றிகளை வெளியிடவும் மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை 20 ரூபாவிற்கே விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை – நிதி ராஜாங்க அமைச்சர்

Posted by - January 17, 2017

அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை 20 ரூபாவிற்கே தொடருந்தும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை 20 ரூபாவில் இருந்து 30 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் போராட்டம் மேற்கொண்டனர். இதனையடுத்து அவர்களும் அதிகாரிகளால் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் போரின் போராட்டம் கைவிடப்பட்டது. எனினும் அந்த

தமிழ் மக்கள் பேரவையில் மூன்று அரசியல் கட்சிகள் இணைவு!

Posted by - January 17, 2017

தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பின் அணியில் தற்போது மூன்று அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புக்களும் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு பிரதிநிதி ரீ.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

வறட்சி காலத்தில் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள ஐநா

Posted by - January 17, 2017

நாட்டில் ஏற்படக் கூடிய வறட்சியான நிலையின் போது, மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய நிவாரணங்கள் குறித்து ஆராய, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதியை சந்தித்துள்ளது.

கூட்டத்தை சீர்குழைப்பதற்கு அரசாங்கம் தற்போது சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது

Posted by - January 17, 2017

எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தப்படும் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஸவுடன் புதிய முகங்கள் சில கலந்துகொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அலுத்கமகே தெரிவித்தார்.

தேசிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதய ஷாந்தவிடம் வாக்குமூலம்

Posted by - January 17, 2017

தேசிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதய ஷாந்த குணசேகர பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர் கைது

Posted by - January 17, 2017

சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதகமான நிபந்தனைகளின் அடிப்படையிலா ஜீ.எஸ்.பி பிளஸ் வழங்கப்படுகிறது?

Posted by - January 17, 2017

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் 58 நிபந்தனைகளுக்கு இணங்கியுள்ளதாக வௌியான செய்திகளை மறுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சாலாவ ஆயுத கிடங்கு வெடிப்பு: சேதமடைந்த சொத்துக்களின் பெறுமதி வெளியானது!

Posted by - January 17, 2017

கொஸ்கம – சாலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பினால் சேதமடைந்த சொத்துக்களின் பெறுமதி ஆயிரத்து 329 மில்லியன் ரூபா என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.லியனவல தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளை பெற இலங்கை அரசு இன்னும் பல கடவைகளை கடக்க வேண்டும்

Posted by - January 17, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளை பெற இலங்கை அரசு இன்னும் பல கடவைகளை கடக்க வேண்டும், உரிய முடிவுகள் சுமார் நான்கு மாதங்களின் பின் அறிவிக்கப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.