கூட்டத்தை சீர்குழைப்பதற்கு அரசாங்கம் தற்போது சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது

319 0

1293418032எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தப்படும் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஸவுடன் புதிய முகங்கள் சில கலந்துகொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அலுத்கமகே தெரிவித்தார்.

அந்த கூட்டத்தை சீர்குழைப்பதற்கு அரசாங்கம் தற்போது சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், தமது குழுவில் சிலரை கைது செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

எவ்வாறாயினும், கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். இந்த அரசாங்கம் நாட்டுக்கு வேண்டாதவற்றை செயற்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அலுத்கமகே குறிப்பிட்டார். கண்களாலும், செவிகளாலும் உணரக்கூடிய அபிவிருத்தியை முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஸவே மேற்கொண்டதாக அந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கெகேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து மாற்றத்தை மேற்கொள்வதாக கூறிய போதும் இதுவரை எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என அவர் குற்றம்சுமத்தினார். தற்போதைய அரசாங்கம் மஹிந்தவை தோல்வியடையச் செய்ய சூழ்ச்சிகளை மேற்கொண்ட போதும் சிலர் மஹிந்தவிற்கு இருக்கின்ற மக்கள் பலத்தைக் கண்டு அச்சமடைந்திருப்பதாக தெரிவித்தார்.