அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை 20 ரூபாவிற்கே விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை – நிதி ராஜாங்க அமைச்சர்

389 0

lakshman-yapaஅதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை 20 ரூபாவிற்கே தொடருந்தும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை 20 ரூபாவில் இருந்து 30 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

இதனையடுத்து அவர்களும் அதிகாரிகளால் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் போரின் போராட்டம் கைவிடப்பட்டது.

எனினும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் மீண்டும் நேற்றிலிருந்து போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த நிலையிலேயே, அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை 20 ரூபாவிற்கே தொடருந்தும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக, நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.