சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
படகொன்றில் சென்ற அவர் தமிழக கடற் பகுதியில் வைத்து இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேவேளை, 27 வயதான வவுனியா பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், கடந்த 13ம் திகதி இந்தியா நோக்கி புறப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட நால்வர் அண்மையில் இதுபோன்று கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

