ஐரோப்பிய ஒன்றிய சந்தையிலிருந்து விலக பிரிட்டன் முடிவு

Posted by - January 17, 2017

நேற்று விடுத்துள்ள விசேட அறிவிப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பகுதியளவில் நிலைத்திருந்து பகுதியளவில் விலகியிருந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாது. சுதந்திரமான முறையில் தமது வர்த்தக நடவடிக்கைளை முன்னெக்க பிரிட்டன் விரும்புகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் பகுதிநேர அங்கத்தவராக இருக்காது என பிரிட்டன் பிரதமர் தெரேஸா மே அறிவித்துள்ளார்.

வரட்சியால் திருகோணமலையில் 50 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நாசம்

Posted by - January 17, 2017

அதிக வரட்சியான காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்துள்ளார். இந்த வரட்சி நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளையதினம் விசேட மாவட்ட குழுக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரட்சி காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 21 ஆயிரத்து 500 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குச்சவெளி, மூதூர்,

வனஜீவராசிகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளருக்கு அழைப்பு

Posted by - January 17, 2017

உடுவே தம்மாலோக தேரர் யானை குட்டி ஒன்றை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் உபுல் இந்திரஜித் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போது கொழும்பு மேல்நீதிமன்றத்தின் நீதிபதி நிஸ்ஸங்க பந்துல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குறித்த வழக்கின் முக்கிய பிரதிவாதியாக கருதப்படும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு வழக்கு விசாரணை தொடர்பான அறிவித்தல் உரிய முறையில்

கனடாவில் இருந்து ஈழத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படவுள்ளார்

Posted by - January 17, 2017

கனடாவில் இருந்து ஈழத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படவுள்ளார். மாணிக்கவாசகம் சுரேஷ் என்ற அவர் மீது, விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தமை மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவரது உத்தரவின் அடிப்படையிலான செயற்பாடுகளை கனடவில் முன்னெடுத்தமை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, கடந்த 2 தசாப்தங்களாக அவர் நாடுகடத்தல் உத்தரவுக்கு எதிராக வழக்காடி வந்தார். எனினும், அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னார்வமாக இணைந்து செயற்பட்டமை மற்றும் கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான உலக தமிழர் இயக்கத்துடன்

எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழில் நிகழ்வு

Posted by - January 17, 2017

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு இந்திய துணை தூதுவர் திரு.ஏ.நடராஜா தலைமையில் இதன்போது மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் பொன். ஐங்கரநேசன் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது தெரிவுசெய்யப்பட்ட நூறு வறுமைக்குட்பட்டர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது.

மன்னாரில் 45 கிலோ கஞ்சா மீட்பு

Posted by - January 17, 2017

மன்னார் – பள்ளிமுனை கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்றிலிருந்து 45 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னர் பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கிடையே மோதல்

Posted by - January 17, 2017

வவுனியா நகரப் பகுதியில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக குறித்த பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவால் நேற்று திறந்துவைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடத்தில் தனியார் பேருந்துகள் தரித்து நிற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, அரச பேருந்துகள் நகரப் பகுதியில் தரித்து நிற்கின்றன. இதனால், நகரத்திலிருந்து தொலைவில் அமைந்துள்ள தனியார் பேருந்துகளுக்கு பெரும் நட்டம் ஏற்படுவதாகக் கூறி தனியார் பேருந்து சாரதிகளால் இன்று ஆர்ப்பாட்டம்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்க சிங்களத் தலைவர்கள் இழுத்தடிப்பு

Posted by - January 17, 2017

சிங்களத் தலைவர்கள், காலம் கடத்த முயற்சிக்கின்றார்களே தவிர, இனப் பிரச்சினைக்குத் தீர்வைக்கான முயற்சிக்கிறார்கள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமுன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இதனைத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி

Posted by - January 17, 2017

மட்டக்களப்பு, வெல்லாவெளி, வீரமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். குறித்த இளைஞர்கள் சென்ற உந்துருளி வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலுள்ள மின்சார கம்பத்தில் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, மண்டூர் பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய இளைஞர்களே விபத்தில் பலியானர். இதேவேளை, மீரிகம – பஸ்யால – கிரிவுல்ல வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் பலியானதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடரூந்து திணைக்கள அதிகாரிகள் எனக் கூறி பண மோசடி முயற்சி

Posted by - January 17, 2017

தொடரூந்து திணைக்கள காணிப் பிரிவு அதிகாரிகள் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட முயற்சித்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம தொடரூந்து நிலையத்துக்கு அருகில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொடரூந்து நிலையத்துக்கு சொந்தமான காணிகளில் குடியமர்ந்திருப்பவர்களிடம் அவர்கள் பண மோசடியில் ஈடுபட முயற்சித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காணி உறுதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொடுக்க தாம் வந்திருப்பதாகவும், அதற்காக பணம் வழங்கவேண்டும் என்றும் மோசடியாளர்கள், குடியிறுப்பாளர்களிடம் கூறியுள்ளனர். இது தொடர்பில் சந்தேகம் கொண்ட குடியிறுப்பாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதையடுத்து, சம்பவ