மன்னார் – பள்ளிமுனை கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்றிலிருந்து 45 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மன்னர் பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

