வனஜீவராசிகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளருக்கு அழைப்பு

344 0

courtஉடுவே தம்மாலோக தேரர் யானை குட்டி ஒன்றை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் உபுல் இந்திரஜித் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போது கொழும்பு மேல்நீதிமன்றத்தின் நீதிபதி நிஸ்ஸங்க பந்துல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கின் முக்கிய பிரதிவாதியாக கருதப்படும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு வழக்கு விசாரணை தொடர்பான அறிவித்தல் உரிய முறையில் வழங்கப்படவில்லை என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பிரதிப் பணிப்பாளரை எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.