எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழில் நிகழ்வு

319 0

mgr-ok-655x450தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு இந்திய துணை தூதுவர் திரு.ஏ.நடராஜா தலைமையில் இதன்போது மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது

இந்த நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் பொன். ஐங்கரநேசன் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தெரிவுசெய்யப்பட்ட நூறு வறுமைக்குட்பட்டர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது.