வவுனியாவில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கிடையே மோதல்

345 0

fight_drivers_003வவுனியா நகரப் பகுதியில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக குறித்த பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவால் நேற்று திறந்துவைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடத்தில் தனியார் பேருந்துகள் தரித்து நிற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, அரச பேருந்துகள் நகரப் பகுதியில் தரித்து நிற்கின்றன.

இதனால், நகரத்திலிருந்து தொலைவில் அமைந்துள்ள தனியார் பேருந்துகளுக்கு பெரும் நட்டம் ஏற்படுவதாகக் கூறி தனியார் பேருந்து சாரதிகளால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அரச பேருந்து சாரதிகளுக்கும், தனியார் பேருந்து சாரதிகளுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.