ஈழ அகதிகள் தொடர்பான கொள்கையை மாற்றியது இந்தோனேசியா
ஈழ அகதிகளை முறையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து, இந்தோனேசியா அகதிகள் தொடர்பான கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜகார்த்தா போஸ்ட் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் அந்த நாட்டின் ஜனாதிபதியால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா நோக்கி அகதிகளாக சென்ற ஈழத்தவர்கள் பலர் படகு இயங்காத நிலையில் இந்தோனேசியாவில் தரையிறங்க முயற்சித்த போதும், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பில் சர்வதேச அளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில்

