இலங்கையில் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களைப் போல இல்லாமல், தற்போது நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏற்ற அரசியல் பின்னிலைகள் உருவாகி இருக்கின்றன.
நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றன.
அதேநேரம், தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜே விபியும் அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு உருவாக்க செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.
முன்னர் இதுவிடயமாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதும், அந்தந்த காலப்பகுதியில் எதிர்கட்சிகளாக இருந்த கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அவை தோல்வி கண்டன.
சுதந்திரத்தின் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த முயற்சிகள் தோவ்வி அடைந்திருக்கின்றன.
எனினும் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை நம்பிக்கைத் தருவதாகவும், நாட்டுக்கு கிடைத்துள்ள அரிதான வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

