நைஜீரிய வான் படையினர் தாக்குதல் – அகதிகள் பலி

235 0

kurdish_miniநைஜீரிய வான் படையினரின் யுத்த விமானம் ஒன்று நைஜீரியாவில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றின் மீது தவறுதலாக தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் 100க்கும் அதிகமான அகதிகளும், தொண்டு பணியாளர்களும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

போக்கோ ஹராம் தீவிரவாதிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் கட்டளை குறித்த யுத்த விமானத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் அதன் விமானியால், தவறுதலாக குறித்த முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

முன்னரும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள போதும், நைஜீரியாவின் பாதுகாப்பு தரப்பினர் தங்கள் மீதான தவறை ஒப்புக் கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்று கூறப்படுகிறது.