இலங்கைக்கு முன்னுரிமை – ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர்

226 0

2(1158)இலங்கைக்கு ஆதரவு வழங்க தமது நிறுவனம் முன்னுரிமை வழங்குவதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜீன் லீ ஜீவான் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டின் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெருந்தெருக்கள், தொடரூந்து பாதைகள், துறைமுகங்கள் மற்றும் நகர அபிவிருத்தி ஆகிய பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்காக உதவி கடனுதவிகளை வழற்குவதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் இதன்போது கூறியுள்ளார்.

இதற்கிடையில் பூகோள பொருளதார முன்னேற்றத்துக்கு, சுதந்திர வர்த்தக வலையங்கள் அதிகரிக்கப்படுவதுடன், பொருளாதார திறந்த நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று சீனாவின் ஜனாதிபதி சீ ஜின்பின் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த மாநாடு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

இதன்போது முதலீடுகள், ஹம்பந்தொட்டை முதலீட்டு வலையம் மற:றும் கொழும்பு நிதி நகர நிர்மாணப் பணிகள் போன்றன தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.