முதலமைச்சர்களுடன் மஹிந்த விசேட சந்திப்புக்கு தயார்

Posted by - January 21, 2017

சிறீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய இந்த தகவலை வௌியிட்டுள்ளார். 

4 பாடசாலைகள் முற்றாக மூடப்படும் -கல்வியமைச்சு

Posted by - January 21, 2017

2016 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராத சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் சரிபார்க்கும் பணிகளுக்காக ஈடுபடுத்தப்படும் 4 பாடசாலைகள் முற்றாக மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது

Posted by - January 21, 2017

நாட்டின் அனைத்து பிரிவுகளும் கிட்டத்தட்ட பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா கூறினார்.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து ஆரம்பம்

Posted by - January 21, 2017

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து படகு சேவை  புதிதாக உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. நேற்று காலை 8.30 க்கு புங்குடுதீவு – குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து ‘நெடுந்தாரகை’ என நாமகரணப்படுத்தப்பட்ட பயணிகள் படகு தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்தது. இந்த நிகழ்வில் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண
சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 80

பல்மைராவின் பெரும் பகுதியை ஐ. எஸ் தீவிரவாதிகள் அழித்துவிட்டனர்

Posted by - January 21, 2017

சிரியாவின் பழமையான நகரான பல்மைராவின் பெரும் பகுதியை ஐ. எஸ் தீவிரவாதிகள் அழித்துவிட்டதாக சிரியாவின் தொல்பொருள் ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ட்ரடிரிபைலோன் என்று அறியப்படும் நான்கு வாயில்கள் உடைய ரோமன் கட்டிடக்கலை அமைப்பையும், ரோமன் அமைப்பில் இருக்கும் அரைவட்ட அரங்கின் தோற்றத்தையும் இந்த தீவிரவாதிகள் உடைத்துவிட்டதாக மாமௌன் அப்துல்காரிம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகுள் சபையின் யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம்பெற்ற இந்த இடிபாடுகள் உடைய நகரத்தை, டிசம்பர் மாதம் ஐ.எஸ். குழு, சிரியா அரச படைப்பிரிவுகளிடம் இருந்து

ஒரு நாடு, மதத்தின் அடிப்படையில் தங்கியிருக்க முடியாது – சம்பந்தன்

Posted by - January 21, 2017

ஒரு நாடு, மதத்தின் அடிப்படையில் தங்கியிருக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், மதமும் நாட்டைத் தழுவியதன் அப்படையில் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற அன்னை தெரேசாவின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூரகமும், யாழ்ப்பாண கத்தோலிக்க திருச்சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. அன்னை தேரேசாவுடன் இணைந்து பணியாற்றிய மும்பை தேர்தல் ஆணையாளரும் இந்த

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை இலங்கை குணப்படுத்த வேண்டியது முக்கியம் – ஐக்கிய நாடுகள் சபை

Posted by - January 21, 2017

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை இலங்கை குணப்படுத்த வேண்டியது முக்கியம் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. சுட்விசர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் செய்ட் ராட் அல் உஸைன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதனை வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையில் ஏற்பட்டுள்ள சாதகமான நிலைமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக செய்ட் ராட் அல் உஸைன் இதன்போது தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பினூடாக அனைத்து இன

ஜனாதிபதியின் ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கவிழ்க்க முடியாது – மஹிந்த அமரவீர

Posted by - January 21, 2017

ஜனாதிபதியின் ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜா எல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தினமும் பேரணி நடத்துகின்றது, கூட்டம் நடத்துகின்றது. எதிர்க்கட்சியில் இருக்கும்போது செய்ய வேண்டிய விடயம் இதுவாகும். ஐக்கிய தேசியக் கட்சி 17 வருடங்களாக அரசாங்கத்தில் இருந்தபோது இவ்வாறான பல பேரணிகளை நடத்தப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம்

நுகேகொடை கூட்டம் வெற்றியளிக்கும் – மஹிந்த நம்பிக்கை

Posted by - January 21, 2017

27ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெறவுள்ள கூட்டம் வெற்றியளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்ககப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவண்ஸவை வெளிக்கடை சிறைச்சாலையில் நேற்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் பலவீனமடையும்போதும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதுபோகும் போதும் எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களுக்கு அசௌகரிய காலம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், அரசாங்கத்தை வீழ்த்தும் செயற்படுகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஸ