4 பாடசாலைகள் முற்றாக மூடப்படும் -கல்வியமைச்சு

221 0

17589592519974100091287519540images2016 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராத சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் சரிபார்க்கும் பணிகளுக்காக ஈடுபடுத்தப்படும் 4 பாடசாலைகள் முற்றாக மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று தொடக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் குறித்த பாடசாலைகளில் விடைத்தாள் சரிபார்த்தல் பணிகள் இடம்பெறும்.

பொரள்ளை கண்ணங்கர மகா வித்தியாலயம், குருணாகலை வெலகெதர வித்தியாலயம், குருணாகலை சி.டப்ளியு.டப்ளியு.கண்ணங்கர வித்தியாலயம் மற்றும் கண்டி புனித அந்தோனி மகளீர் பாடசாலை ஆகிய பாடசாலைகள் குறித்த காலப்பகுதியில் மூடப்படும்.

இதுதவிர, மேலும் 16 பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் தருவாயில் சரிபார்க்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01. கொ/கிளிப்டன் மகளிர் பாடசாலை, கொழும்பு 9
02. களு/களுத்துறை திஸ்ஸ மகா வித்தியாலயம், களுத்துறை
03. கம்/கலகெடிஹேன மகா வித்தியாலயம், கலகெடிஹேன
04. ப/ஊவா மத்திய மகா வித்தியாலயம், பதுளை
05. உனவட்டுன மகா வித்தியாலயம், உனவட்டுன
06. பம்பரண சாரிபுத்த மகா வித்தியாலயம், மாத்தறை
07. குளி/சுரதூத மகளிர் வித்தியாலயம், குளியாபிட்டிய
08. கே/கேகாலை மகளிர் வித்தியாலயம், கேகாலை
09. கண்/ஶ்ரீ ராஹூல வித்தியாலயம், கட்டுகஸ்தொட்ட
10, மத்திய மகா வித்தியாலயம், அனுராதபுரம்
11. கார்மேல் மகளிர் பாடசாலை, கல்முனை
12. புனித சிசிலியா மகளிர் வித்தியாலயம், மட்டக்களப்பு
13. புனித சேவியர் வித்தியாலயம், திருக்கோணமலை
14. சைவப் பிரகாச மகளிர் வித்தியாலயம், வவுனியா
15. ஹிந்து மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்
16. வைத்தீஸ்வரா மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம்