போரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை இலங்கை குணப்படுத்த வேண்டியது முக்கியம் – ஐக்கிய நாடுகள் சபை

246 0

un_CIபோரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை இலங்கை குணப்படுத்த வேண்டியது முக்கியம் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

சுட்விசர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் செய்ட் ராட் அல் உஸைன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையில் ஏற்பட்டுள்ள சாதகமான நிலைமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக செய்ட் ராட் அல் உஸைன் இதன்போது தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பினூடாக அனைத்து இன மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுத்துரைத்துள்ளார்.