சிரியாவின் பழமையான நகரான பல்மைராவின் பெரும் பகுதியை ஐ. எஸ் தீவிரவாதிகள் அழித்துவிட்டதாக சிரியாவின் தொல்பொருள் ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்ரடிரிபைலோன் என்று அறியப்படும் நான்கு வாயில்கள் உடைய ரோமன் கட்டிடக்கலை அமைப்பையும், ரோமன் அமைப்பில் இருக்கும் அரைவட்ட அரங்கின் தோற்றத்தையும் இந்த தீவிரவாதிகள் உடைத்துவிட்டதாக மாமௌன் அப்துல்காரிம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகுள் சபையின் யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம்பெற்ற இந்த இடிபாடுகள் உடைய நகரத்தை, டிசம்பர் மாதம் ஐ.எஸ். குழு, சிரியா அரச படைப்பிரிவுகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றியது.
பல்மைராவில் அண்மையில் நடைபெற்றுள்ள அழிவை புதியதொரு போர் குற்றம் என்றும், சிரியா மக்களுக்கும், மனித குலத்திற்கும் மிக பெரிய இழப்பு என்றும் யுனெஸ்கோ கண்டித்துள்ளது.

