ஒரு நாடு, மதத்தின் அடிப்படையில் தங்கியிருக்க முடியாது – சம்பந்தன்

266 0

140810162702_sampanthan_640x360_afpஒரு நாடு, மதத்தின் அடிப்படையில் தங்கியிருக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மதமும் நாட்டைத் தழுவியதன் அப்படையில் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற அன்னை தெரேசாவின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூரகமும், யாழ்ப்பாண கத்தோலிக்க திருச்சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

அன்னை தேரேசாவுடன் இணைந்து பணியாற்றிய மும்பை தேர்தல் ஆணையாளரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின்ர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.