இலங்கை முழுவதும் நடந்தே செல்லும் பெண்!
இலங்கை முழுவதும் 1268 கிலோ மீற்றர் நடந்து செல்லும் முயற்சியில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை முழுவதும் 1268 கிலோ மீற்றர் நடந்து செல்லும் முயற்சியில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார்.
அரச அதிகாரிகள் முதுகெழும்பை நிமிர்த்தி வேலை செய்ய வேண்டும் என, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அஷோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டத்தரணிகள் சங்கமான ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் முழுமையாக இணைந்து கொண்டுள்ளது. கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சட்டத்தரணிகள் சங்கத்தை ஸ்தாபிக்கும் நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கம் வகித்த 600 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வின் போது புதிய சங்கத்தின் தலைவராக டப்ளியூ. தயாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர சட்டத்தரணிகள் ஒழுங்கு
வருங்காலத்தில் பேக்கரி தயாரிப்புக்களுக்கான விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
சல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் திருச்சியிலும் ஆயிரக்கணக்கான இளையோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையடியில் ஒன்றுகூடிய மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளையோர் உள்ளிட்டவர்களது போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகின்றது. வாடிவசல்கள் திறக்கும் வரை வீட்டு வாசல்களை மிதியோம் என்ற உறுதியுடன் போராடிவரும் தமிழக இளையோரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருச்சி
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கேட்டறியும் கலந்துரையாடலொன்று நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில், நேற்று முற்பகல் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது, தாம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்கள் எடுத்துக் கூறினர். குறித்த கலந்துரையாடலில், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கலந்து கொண்டார். தாம் நாடு திரும்பி வந்த நிலையிலும், தமக்கு எவ்விதமான உதவிகளும் இதன்போது வழங்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கம் வெளியிட்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மாசிமாதம்(பெப்ரவரி) கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தினை முன்னிட்டு நடாத்தும் “ஓவியம் வரைதல் போட்டி-2017” நடாத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். இது சம்பந்தமாக மாவட்டத்தில் உள்ள சகல வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும்,திவிநெகும பணிப்பாளர்,மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் நிலையப்பொறுப்பதிகாரி ஆகியோர்களுக்கும் எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. எமது மாவட்டத்தின் சகல கல்வி வலயங்களிடையேயும்,ஓவியம் வரைதல்,போட்டியினை நடாத்தி ஒவ்வொரு வலயங்களிலிருந்தும் முதல் மூன்று இடங்களைப் பெறும் ஓவியம் ,மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இந்திய ஆந்திர பிரதேசத்தில் ஷில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் குறைந்தது 32 பேர் பலியாகினர். இது தவிர மேலும் 54 பேர் காயமடைந்த நிலையில் அருகாமையில் உள்ள மருத்துவ மனைகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக கிழக்கு கரையோர தொடரூந்து அதிகாரி ஜே.பீ. மிஷ்ரா தெரிவித்துள்ளார். குனேரு தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் எஜ்சினும் ஏழு பயணிகள் பெட்டியும் தடம்புரண்டதன் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே மேலும் பலர் அகப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள மீட்பு பணியாளர்கள், இதன் காரணமாக
வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் டெங்கு தொற்று அதிகரிப்பதற்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களால் உபயோகத்திற்காக சேகரிக்கப்படும் நீரின் ஊடாக டெங்கு நுளம்புகள் தொற்று ஏற்படுவதற்கான ஏது நிலைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் முதல் 21 நாள் காலப்பகுதியினில் மட்டும் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் 24ஆம் திகதி விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்
தேசிய சுதந்திர முன்னணியின் விசேட பொதுக்கூட்டம் இன்று மாலை சுகததாச விளையாட்டு அரங்கில் இடம்பெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் விசேட விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்வார் என தேசிய சுதந்திர முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர் அறிவித்தல் ஒன்றை விடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேச நாணயகார, பிவித்துரு ஹெலஉறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அந்த