இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கேட்டறியும் கலந்துரையாடல்(காணொளி)

278 0

kiliஇந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கேட்டறியும் கலந்துரையாடலொன்று நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில், நேற்று முற்பகல் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது, தாம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்கள் எடுத்துக் கூறினர்.

குறித்த கலந்துரையாடலில், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கலந்து கொண்டார்.
தாம் நாடு திரும்பி வந்த நிலையிலும், தமக்கு எவ்விதமான உதவிகளும் இதன்போது வழங்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கம் வெளியிட்டனர்.

அவ்வாறு தமக்கு உதவிகள் வழங்கப்பட்டிருந்தால், தமது குடும்ப பதிவு அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தாம் தற்போது உறவினர், அறிந்தவர்களின் வீடுகளில் பாரிய சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்கள், ஐக்கிய நாடுகளிற்கான அகதிகள் அமைப்போ அல்லது இலங்கை அரசோ இதுவரை எவ்வித உதவிகளும் செய்யவில்லை எனவும் கவலை வெளியிட்டனர்.