ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு மாகாண விஜயத்தினை முன்னிட்டு ஓவியம் வரைதல் போட்டி

399 0

unnamedஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  எதிர்வரும் மாசிமாதம்(பெப்ரவரி) கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தினை முன்னிட்டு நடாத்தும் “ஓவியம் வரைதல் போட்டி-2017” நடாத்தவுள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக  மாவட்டத்தில் உள்ள சகல வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும்,திவிநெகும பணிப்பாளர்,மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் நிலையப்பொறுப்பதிகாரி ஆகியோர்களுக்கும் எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

எமது மாவட்டத்தின் சகல கல்வி வலயங்களிடையேயும்,ஓவியம் வரைதல்,போட்டியினை நடாத்தி ஒவ்வொரு வலயங்களிலிருந்தும் முதல் மூன்று இடங்களைப் பெறும் ஓவியம் ,மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

மாவட்டத்தினால் நியமிக்கப்படும் நடுவர் குழாமினால் முதல் மூன்று இடங்களைப்பெறும் ஓவியங்களுக்கு மட்டக்களப்பில் நடைபெறும் நிகழ்வில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பணப்பரிசில்களும்,சான்றீதழ்களும் வழங்கப்பட தீர்மானித்துள்ளது.

ஓவியமானது  “மதுபோதையிலிருந்து விடுதலை பெற்ற சக வாழ்வுடன் கூடிய நாடு”  , “பேண்தகு அபிவிருத்தியை நோக்கிய நாடு” , “பெண்களும் அரசியல் தலைமைத்துவமும்” எனும் கருப்பொருளில் ஓவியங்களை கொண்டதாக அமைய வேண்டும்.

இந்தப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் ஓவியங்களுக்கு முறையே 20000 ரூபா,10000ரூபா,5000ரூபா எனப் பணப்பரிசில்களும்,நன்சான்றீதழ்களும் வழங்கப்படவுள்ளதாகவும்,இது சம்பந்தமாக  தெளிவான அறிவுறுத்தல்கள் வலயக்கல்வி பணிப்பாளர்  ஊடாக பாடசாலைகளுக்கு  வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்  தெரிவித்தார்.