வரட்சி பாதித்த பகுதியில் டெங்கு அபாயம்

259 0

download (1)வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் டெங்கு தொற்று அதிகரிப்பதற்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களால் உபயோகத்திற்காக சேகரிக்கப்படும் நீரின் ஊடாக டெங்கு நுளம்புகள் தொற்று ஏற்படுவதற்கான ஏது நிலைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் முதல் 21 நாள் காலப்பகுதியினில் மட்டும் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 24ஆம் திகதி விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.