உளவியல் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

Posted by - January 25, 2017

உளவியல் ஆலோசனை தொடர்பில் முறையான பயிற்சியை பெற்ற ஆசிரியர்களை புதிதாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அதிகாரிகளுக்கு  ஆலோசனை வழங்கியுள்ளார். உளவியல் ஆலோசனை தொடர்பில் புதிதாக 2 ஆயிரத்து 753 ஆசிரியர்களை கல்விக் கட்டமைப்பிற்குள் உள்வாங்குமாறு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போதைய சமூகங்கள் மத்தியில் பாடசாலை மாணவர்கள் பல்வேறு உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக அவர்களது கல்வி மற்றும் சமூக செயற்பாடுகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, பாடசாலைகளில்

நெல் ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைச்சரவை உப குழு

Posted by - January 25, 2017

தற்போது நெல் வழங்கப்பட்டு அதனை சந்தைக்கு விநியோகிக்காமல் இருக்கும் நெல் ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைச்சரவை உப குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை வசம் இருக்கம் நெல் கையிருப்பை லங்கா ச.தொ.ச நிறுவனம், தனியார் நெல் ஆலை உரிமையாளர்களின் ஊடாக அரிசியாக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த உப குழு அமைக்கப்படவுள்ளது. இதேவேளை, ஜனாதிபதியின் வேண்டுகோளின் படி 10,000 மெட்ரிக் தொன் அரிசியானது இந்துனேசியா அரசாங்கத்தின் மூலம் இலங்கைக்கு

வெள்ள நீருக்கு நிதியொதுக்கீடு – கிழக்கு முதலமைச்சர்

Posted by - January 25, 2017

கிழக்கு மாகாணத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் வருடந்தோறும் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு முன்னுரிமையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். கிழக்கில் மழைக் காலங்களில் பல இடங்கள்  வெள்ள நீரில் மூழ்குகின்றன. இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர் இதனைக் கருத்திற் கொண்டு முறையான வடிகாண் கட்டமைப்புக்களை நிர்மாணிப்பதற்கு கிழக்கு மாகாண சபை தீர்மானித்துள்ளது. கிழக்கின் முக்கிய அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே கிழக்கு

அமைச்சர் சுவாமிநாதனின் செயற்பாடுகள் குறித்து சர்வதேச ஊடகம் அதிருப்தி

Posted by - January 25, 2017

பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உரிய விளக்கங்களை வழங்க தவறி இருப்பதாக த ஏசியன் ட்ரிபியுன் ஊடகம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 65 ஆயிரம் பொருத்துவீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டம் அமைச்சரின் பொறுப்பின் கீழ் உள்ளது. இது தொடர்பில் ஃப்ரான்சை தளமாக கொண்ட ஆர்சிலர் மிட்டால் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. எனினும், பொருத்துவீடுகளை நிர்மாணிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன. 21 லட்சம் ரூபாய் செலவில் இரும்பு மற்றும்

இலங்கை சட்டத்தரணி நியூசிலாந்தில் மரணம்

Posted by - January 25, 2017

நியுசிலாந்தில் தீ விபத்தில் உயிரிந்த இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சட்டத்தரணியான கைலாஸ் தனபாலசிங்கத்தின் இறுதிகிரிகை நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்ததாக நியுசிலாந்தின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நியுசிலாந்தின் ஒக்லேண்டில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற தீ விபத்தில் அவரது மனைவி, ஐந்து வயதான மகன் மற்றும் மாமியார் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக அவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குறித்த சட்டத்தரணியும் உயிரிழந்தார். தற்போது அவரது

ட்ரம்பின் நடவடிக்கையால் ஈழ அகதிகளுக்கு பாதிப்பு

Posted by - January 25, 2017

அமெரிக்காவின் குடிவரவுச் சட்டத்தை அந்த நாட்டின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திருத்தவிருக்கின்ற நிலையில், அது ஈழ அகதிகளுக்கு பாதக நிலையை உருவாக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. மானுஸ் மற்றும் நவுறு தீவுகளில் தங்கியுள்ள ஈழ ஏதிலிகள் உள்ளிட்டவர்களை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு ஒபாமா நிர்வாகத்தினால் அவுஸ்திரேலியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. எனினும், பல்வேறு அகதிகள் ஒப்பந்தங்களை டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்யவுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்துக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே,

வெளிநாடுகளில் தொழில் புரிவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பு

Posted by - January 25, 2017

வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்கின்றவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அபுதாபியில் நடைபெற்ற நான்காவது அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். வெளிநாட்டு தொழில்வாய்ப்பு என்பது இலங்கையின் முக்கிய வருவாய்துறையாக மாறியுள்ளது. எவ்வாறு தொழிற்தெரிவு இடம்பெறுகிறது? தொழில்வாய்ப்பை பெறுகின்றவர்கள் எவ்வாறு தங்களை பதிவு செய்துக் கொள்கின்றனர்? தொழில்வாய்ப்புத் தேடல் உள்ளிட்ட விடயங்களுடன்இ முக்கியமாக தொழிலுக்கு பின்னர் நாடு திரும்புகின்றவர்களுக்கு என்ன நிகழ்கிறது போன்ற விடயத்தையும் அறிவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

3 விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளன

Posted by - January 25, 2017

பாரிய மோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, மூன்று விசாரணைகளின் இறுதி அறிக்கைகளை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ப்ரீத்தி பத்மன் சூரசேன இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைகள், லுனுவில தெங்கு ஆராச்சி நிலையம் என்பவை குறித்த விசாரணை அறிக்கைகளும், முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. விசாரணைகள் அடிப்படையிலான பரிந்துரைகளும் இந்த அறிக்கைகளில்  முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று அறிக்கைகளுடன்

காணாமல் ஆக்கப்படுதல் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்

Posted by - January 25, 2017

உலகில் பலவந்தமாக காணாமல்போகச் செய்தல் அதிகமாக இடம்பெறும் இரண்டாவது நாடாக இலங்கை உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பலவந்தமாக கடத்தல் மற்றும் காணாமல்போதல்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பான உறுதியாக தகவல்கள் இல்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய கிளை தெரிவித்துள்ளது. குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது காணாமல்போனவர்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியிடப்படுவதாகவும், அந்த அமைப்பு சுட்டிகாட்டியுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையினால் கொழும்பில் நேற்று

மஹிந்தவைக் கொல்ல றோவும், சிஐஏயும் முயற்சி – கம்மன்பில

Posted by - January 25, 2017

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்கு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோவும், அமெரிக்காவும் முயற்சித்து வருவதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார். ‘இந்திய புலனாய்வுப் பிரிவான றோவின் கணிப்பின் படி,  உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்தின் பலம் குறைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ச தொடர்ந்து அரசியலில் இருப்பதே, அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கிறது. அவர் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வந்து அரசியலில் ஈடுபடுவார் என்று அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. இதனால், மஹிந்த ராஜபக்ச அரசியலை விட்டு