காணாமல் ஆக்கப்படுதல் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்

360 0

உலகில் பலவந்தமாக காணாமல்போகச் செய்தல் அதிகமாக இடம்பெறும் இரண்டாவது நாடாக இலங்கை உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பலவந்தமாக கடத்தல் மற்றும் காணாமல்போதல்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பான உறுதியாக தகவல்கள் இல்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய கிளை தெரிவித்துள்ளது.

குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது காணாமல்போனவர்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியிடப்படுவதாகவும், அந்த அமைப்பு சுட்டிகாட்டியுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையினால் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செயலமர்வின்போதே அந்த அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட உணவுத் தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

வடக்கு கிழக்கில் காணாமல்போனோரின் உறவினர்களால் இந்த போராட்டம் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.