ட்ரம்பின் நடவடிக்கையால் ஈழ அகதிகளுக்கு பாதிப்பு

366 0

அமெரிக்காவின் குடிவரவுச் சட்டத்தை அந்த நாட்டின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திருத்தவிருக்கின்ற நிலையில், அது ஈழ அகதிகளுக்கு பாதக நிலையை உருவாக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

மானுஸ் மற்றும் நவுறு தீவுகளில் தங்கியுள்ள ஈழ ஏதிலிகள் உள்ளிட்டவர்களை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு ஒபாமா நிர்வாகத்தினால் அவுஸ்திரேலியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

எனினும், பல்வேறு அகதிகள் ஒப்பந்தங்களை டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்யவுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்துக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, அமெரிக்க குடியேற்றம் குறித்த எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த இலங்கை அகதிகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.