3 விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளன

331 0

பாரிய மோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, மூன்று விசாரணைகளின் இறுதி அறிக்கைகளை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் ப்ரீத்தி பத்மன் சூரசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைகள், லுனுவில தெங்கு ஆராச்சி நிலையம் என்பவை குறித்த விசாரணை அறிக்கைகளும், முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

விசாரணைகள் அடிப்படையிலான பரிந்துரைகளும் இந்த அறிக்கைகளில்  முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று அறிக்கைகளுடன் குறித்த ஆணைக்குழுவினால் மொத்தமாக 12 விசாரணை அறிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.