தற்போது நெல் வழங்கப்பட்டு அதனை சந்தைக்கு விநியோகிக்காமல் இருக்கும் நெல் ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைச்சரவை உப குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபை வசம் இருக்கம் நெல் கையிருப்பை லங்கா ச.தொ.ச நிறுவனம், தனியார் நெல் ஆலை உரிமையாளர்களின் ஊடாக அரிசியாக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த உப குழு அமைக்கப்படவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியின் வேண்டுகோளின் படி 10,000 மெட்ரிக் தொன் அரிசியானது இந்துனேசியா அரசாங்கத்தின் மூலம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் அரிசி விலை உயர்ந்து காணப்படின் இந்துனேசியா, வியட்நாம் உட்பட மிகவும் அருகிலுள்ள நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு துரிதமாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

