வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்கின்றவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் நடைபெற்ற நான்காவது அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
வெளிநாட்டு தொழில்வாய்ப்பு என்பது இலங்கையின் முக்கிய வருவாய்துறையாக மாறியுள்ளது.
எவ்வாறு தொழிற்தெரிவு இடம்பெறுகிறது? தொழில்வாய்ப்பை பெறுகின்றவர்கள் எவ்வாறு தங்களை பதிவு செய்துக் கொள்கின்றனர்? தொழில்வாய்ப்புத் தேடல் உள்ளிட்ட விடயங்களுடன்இ முக்கியமாக தொழிலுக்கு பின்னர் நாடு திரும்புகின்றவர்களுக்கு என்ன நிகழ்கிறது போன்ற விடயத்தையும் அறிவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
மேலும் வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து தொழில்புரிகின்றவர்களின் சேமநலன்இ சிறந்த வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.

