காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு

Posted by - January 25, 2017

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களின் நலன் கருதி 1000 பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும நிகழ்வு இன்று  பிற்பகல் 2.மணியளவில் புல்மோட்டை அரபா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடை பெற்றது. கிழக்கு மாகாண காணி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி தலைமலயில் நடை பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜெய்னுலாப்தீன் ஹாபிஸ் நஸீர்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 10 மாணவர்களும் இன்று பிணையில் விடுவிப்பு(காணொளி)

Posted by - January 25, 2017

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்ட 10 மாணவர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸாரினால் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின்போது, குறித்த 10 மாணவர்களையும் தலா ஒருவர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன், எதிர்வரும் 27ஆம் திகதி ஏறாவூர் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் ஈ.கருணாகரனினால் முறைப்பாடு

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் புகையிரதம் மோதி ஒருவர் பலி(காணொளி)

Posted by - January 25, 2017

இன்று பிற்பகல் 03.30 மணியளவில் கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதிப்புகையிரதமும், புகையிரதக் கடவையை கடக்க முற்;பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.  

மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில், மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - January 25, 2017

மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு மட்டிக்கழி பகுதியில் இருந்து நாவலடி புதுமுகத்துவாரம் கடற்பரப்பில் படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது வீசிய கடும் காற்றுக் காரணமாக படகு கவிழ்ந்துள்ளதாகவும் இதில் இருந்த ஒருவர் நீந்தி கரை சேர்ந்த நிலையில் ஏனைய இருவரும் காணாமல் போயுள்ளதாவும் காணாமல்போன இருவரும் சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் காணாமல் போன ஒருவரின்

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும்(காணொளி)

Posted by - January 25, 2017

காணாமற்போனோரின் உறவினர்களால், வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. காணாமற்போன தங்களின் உறவினர்கள் தொடர்பில் இறுதியான முடிவை அறிவிக்குமாறும், அரசியல் கைதிகளாக நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் கடந்த திங்கட்கிழைமை ஆரம்பமானது. உண்ணாவிரத போரட்டத்தில் 14 பேர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் தமது இலக்குகளை அடைவதற்கு முதலில் கனவுகாண வேண்டும்- நடராஜன் (காணொளி)

Posted by - January 25, 2017

மாணவர்கள் தமது இலக்குகளை அடைவதற்கு முதலில் கனவுகாண வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் இன்று நடைபெற்ற மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார். தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் பிரதமர் மற்றும் சபாநாயகர்களாகவும் அங்கம் வகிப்பவர்கள் நாளை தமது நாட்டில் அதே பதவிகளில் அங்கம் வகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் இந்தியாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இளைஞர்கள் கனவுகாண வேண்டும் எனும்

முல்லைத்தீவில் 243 ஏக்கர் காணி இரானுவத்தளபதியால் இன்று கையளிப்பு(காணொளி)

Posted by - January 25, 2017

முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்ட மஹிந்தோதயா ஆய்வு கூட கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி, முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனிடம் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான பத்திரங்களை கையளித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 1350 பேருக்கான காணியனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதுடன், 300பேருக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் கேப்பாபுலவு மக்களுக்கு   சொந்தமான 524 ஏக்கர் காணிகள் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தன. தமது காணிகளை விடுவிக்குமாறு கேப்பாபுலவு மக்கள் பல்வேறு

காணாமல் போனோரின் உறவுகளுக்கு ஆதரவாக தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதம்!!

Posted by - January 25, 2017

வவுனியாவில் காணாமல் போன உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் நாளை (26) உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவஇடத்தில் ஒருவர் பலி

Posted by - January 25, 2017

கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவஇடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

சிரியாவைச் சேர்ந்த சிறுமி ட்ரம்புக்கு கடிதம்

Posted by - January 25, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சிரியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி ஒருவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். சிரியாவைச் சேர்ந்த பாணா அலபெட் என்ற சிறுமியே ட்ரம்புக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். சிரியாவில் இடம்பெறும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் தானும் ஒருவர் என்று அந்தச் சிறுமி குறிப்பிட்டுள்ளார். சிரியாவிலுள்ள குழந்தைகளுக்காக தாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ள அந்தச் சிறுமி, அந்தக் குழந்தைகள் அனைவரும் உங்கள் குழந்தைகள் போன்றவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிரியாவின் அலெப்போவில்