முல்லைத்தீவில் 243 ஏக்கர் காணி இரானுவத்தளபதியால் இன்று கையளிப்பு(காணொளி)

266 0

முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்ட மஹிந்தோதயா ஆய்வு கூட கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி, முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனிடம் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான பத்திரங்களை கையளித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1350 பேருக்கான காணியனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதுடன், 300பேருக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் கேப்பாபுலவு மக்களுக்கு   சொந்தமான 524 ஏக்கர் காணிகள் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தன.

தமது காணிகளை விடுவிக்குமாறு கேப்பாபுலவு மக்கள் பல்வேறு போராட்டங்களை நடாத்தி வந்த நிலையில் 524 ஏக்கர் காணியில் 243 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.