அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு சிரியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி ஒருவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
சிரியாவைச் சேர்ந்த பாணா அலபெட் என்ற சிறுமியே ட்ரம்புக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
சிரியாவில் இடம்பெறும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் தானும் ஒருவர் என்று அந்தச் சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவிலுள்ள குழந்தைகளுக்காக தாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ள அந்தச் சிறுமி, அந்தக் குழந்தைகள் அனைவரும் உங்கள் குழந்தைகள் போன்றவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவின் அலெப்போவில் உள்ள தனது பாடசாலை மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் தனது நண்பர்கள் சிலர் இறந்ததாகவும், அதனால், தான் கவலையடைந்ததாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சிரியாவின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பட்டுள்ள குழந்தைகளுக்காக தாங்கள் என்ன செய்வீர்கள் என தான் எதிர்பார்த்திருப்பதாக சிரியாவைச் சேர்ந்த சிறுமியான பாணா அலபெட், டொனால்ட் ட்ரம்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

