மாணவர்கள் தமது இலக்குகளை அடைவதற்கு முதலில் கனவுகாண வேண்டும்- நடராஜன் (காணொளி)

241 0

மாணவர்கள் தமது இலக்குகளை அடைவதற்கு முதலில் கனவுகாண வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் இன்று நடைபெற்ற மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் பிரதமர் மற்றும் சபாநாயகர்களாகவும் அங்கம் வகிப்பவர்கள் நாளை தமது நாட்டில் அதே பதவிகளில் அங்கம் வகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்தியாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இளைஞர்கள் கனவுகாண வேண்டும் எனும் அறிவுரையினையும் நினைவூட்டினார்.பாடசாலையின் அதிபர் ஐ.தயானந்தராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 2017ஆம் ஆண்டுக்காக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் முதல் அமர்வு சபாநாயகர் யோ.நிவேதன் தலைமையில் இடம்பெற்றது.

பாராளுமன்ற அமர்வில் பிரதமராக சி.ராகுலன், சபாநாயகர் யோ.நிவேதன், அவைத்தலைவர் நி.பிரந்தாபன், உட்பட 10 துறைசார் அமைச்சர்களும், 120 பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்