வவுனியாவில் காணாமல் போன உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் நாளை (26) உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமது விடுதலையை வலியுறுத்தியும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதன்படி வெலிக்கடை, அனுராதபுரம், மட்டக்களப்பு , யாழ்ப்பாணம் , கண்டி முதலான சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளே போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் சிலவும் காணாமல் போனோரின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

